வானவில் : பிலிப்ஸ் எல்.இ.டி. டி.வி. அறிமுகம்


வானவில் : பிலிப்ஸ் எல்.இ.டி. டி.வி. அறிமுகம்
x
தினத்தந்தி 19 Dec 2018 3:54 PM IST (Updated: 19 Dec 2018 3:54 PM IST)
t-max-icont-min-icon

பிலிப்ஸ் நிறுவனத் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மிகப் பெரும் வரவேற்பு உண்டு. இந்நிறுவனத்தின் டிரான்சிஸ்டர் மிகவும் பிரசித்தம்.

வானொலி சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சமையலறை சார்ந்த சில பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பிலிப்ஸ் நிறுவனம் இப்போது எல்.இ.டி. டி.வி. தயாரிப்பிலும் தடம் பதிக்கிறது.

இதில் டி.பி.வி. தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கென 7 மாடல்களை பிலிப்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை 22 அங்குலம் முதல் 65 அங்குலம் வரையில் வெவ்வேறு அளவுகளில் வந்துள்ளன. இதில் ஸ்மார்ட் டி.வி.க்களும் அடங்கும். இதில் ஆம்பி லைட் தொழில்நுட்பம் மற்றும் ஹெச்.டி.ஆர். பிளஸ் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. ஸ்போர்ட் ஓ-லெட் டி.வி. உள்ளிட்டவையும் இதில் அடங்கும். ஆரம்ப விலை ரூ. 9,990 ஆகும். ஆன்லைன் மற்றும் விற்பனையகம் மூலம் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது பிலிப்ஸ். நாட்டிலுள்ள 35 ஆயிரம் விற்பனையகங்கள் மற்றும் தனது 200 அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

22 அங்குல டி.வி.யானது, 5400 சீரிஸ் என்ற அடையாளத்துடன் வெளிவந்துள்ளது. ஹெச்.டி. பேனல் கொண்ட இதன் விலை ரூ. 9,990 ஆகும். இதற்கு அடுத்துபடியாக 4200 சீரிஸ் விலை ரூ. 17,990. அதேபோல 5800 சீரிஸ் விலை ரூ. 22,990 மற்றும் ரூ. 42,990. 6100 சீரிஸ் டி.வி.கள் ரூ. 66,900 விலையிலும், ரூ. 79,990 விலையிலும் வந்துள்ளது. 6,700 சீரிஸ் விலை ரூ. 1.5 லட்சமாகும்.

புதிய மாடலில் 65 அங்குல டி.வி.யில் ஆம்பிலைட் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. அதாவது எல்.இ.டி. விளக்கு வெளிச்சத்தின் மூலம் டி.வி.யின் பின்பகுதியில் வெளிச்சம் பரவும். இது டி.வி. பார்ப்பதற்கான சூழலை ஏற்படுத்தும். டி.வி.யில் படம் பார்க்காமல் உங்களது எண்ணத்துக்கேற்ப வெளிச்சம் பரவும் விளக்காகவும் (மூட் லைட்) இதை உபயோகிக்கலாம். எதிர்காலத்தில் ஓ-லெட் டி.வி.யில் ஆம்பிலைட் தொழில்நுட்பம் கொண்ட டி.வி.க்களையும் பிலிப்ஸ் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

Next Story