வானவில் : வயர்லெஸ் ஹீட் தெரபி ஸ்டிராப்
கம்ப்யூட்டரில் அதிகநேரம் வேலைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் கழுத்து வலிக்கு தீர்வாக வந்திருக்கிறது, வயர்லெஸ் ஹீட் தெரபி ஸ்டிராப்.
வலி ஏற்படும் இடங்களில் இதை வைத்தால் அந்த இடத்தில் வெப்பம் பரவச் செய்து ஒத்தடம் கொடுக்கிறது. இதன் மூலம் வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கழுத்து மட்டுமின்றி கை, கால், மூட்டு, மணிக் கட்டு, முழங்கால், கணுக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இதை வைத்து வலியைப் போக்கிக் கொள்ளலாம். இது வயர்லெஸ் மூலம் செயல்படுவதால் இதை எளிதாக வலி உள்ள பகுதிகளில் பொருத்த முடியும். இதற்கென மருத்துவ உதவி தேவையில்லை. இது மென்மையான, அதேசமயம் ஒட்டும் தன்மை உள்ள வெல்குரோ அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் இதை கட்டும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த கருவியின் விலை ரூ. 1,349 ஆகும்.
Related Tags :
Next Story