வானவில் : காற்றை சுத்தமாக்கும் ஸ்மார்ட் டயர்
நகர்ப்புறங்களில் வாகனங்கள் பெருகிய அளவிற்கு மாசும் அதிகரித்து விட்டது. வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுப்புகை உருவாக்கும் சுவாசக் கோளாறுகள், மற்றபிற நோய்களை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி நகர்ப்புறங்களில் வசிக்கும் எண்பது சதவிகித மக்கள் தூய்மையற்ற சுற்றுப்புறத்தில் வாழ்கின்றனர்.
டயர் தயாரிப்பு நிறுவனமான குட் இயர் இதற்கான ஒரு தீர்வை கொண்டுவந்துள்ளது. ஆக்சிஜன் டயர் (OXYGENE) என்று பெயரில் நகரையே சுத்தப்படுத்தும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த டயரின் உட்புறத்தில் ஒரு வித பாசி வளர்கிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்ளும். இந்த பாசி ஒளிசேர்க்கையின் ( PHOTOSYNTHESIS ) படி தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறையில் ஆக்சிஜன் வாயுவை வெளியிட்டு கரியமில வாயுவை உள்ளே இழுத்துக் கொள்கிறது. இதனால் அதிகமான ஆக்சிஜன் காற்றில் உருவாகிறது. காற்றும் சுத்தமாகிறது. மறுசுழற்சி முறையில் உருவாக்கப்படும் ரப்பர் கொண்டு தயாரிக்கப்படும் இந்த டயர் த்ரீ டீ பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் நீடித்த உழைப்புக்கு உத்திரவாதம் என்கின்றனர், இதன் தயாரிப்பாளர்கள்.மேலும் ஒளிசேர்க்கையை கொண்டு உருவாக்கப்படும் சக்தியில் இருந்து காருக்கான மின்சாரத்தை தயாரிக்கிறது.
அதாவது சென்சார்கள் மற்றும் லைட்டுகள் அனைத்தும் இந்த சக்தியிலேயே இயங்கும்.மேலும் வை - பை ( WI-FI ) தொழில்நுட்பம் மூலம் இண்டர்நெட் வழியாக சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுடன் தொடர்பு கொள்ள உதவும். லேன் மாறும்போது, பிரேக் அழுத்தும் போதும் டயரின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகள் மூலம் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் எச்சரிக்கும்.
Related Tags :
Next Story