சிறையில் இருந்து வெளியே செல்பவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ வேண்டும் மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுரை
சிறையில் இருந்து வெளியே செல்பவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி அறிவுரை வழங்கினார்.
போளூர்,
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவண்ணாமலை கிளை சிறையில் மக்கள்நீதிமன்றம் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, கைதிகளிடம் எவ்வாறு உணவு வழங்கப்படு கிறது மற்றும் ஏதாவது குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘சட்ட உதவி தேவைப்படும் கைதிகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வக்கீல் ஏற்பாடு செய்து தரப்படும். சிறையில் இருந்து விடுதலை யாகி வெளியே செல்பவர்கள் இனி குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ வேண்டும்’ என்றார்.
இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சையத்ரஷீத் செய்திருந்தார்.
இதேபோல் போளூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போளூர் கிளை சிறையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. போளூர் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான வே.ஜெகன் நாதன் தலைமை தாங்கினார். குற்றவியல் நீதித்துறை நீதிபதி தாமோதரன், ஆரணி குற்றவியல் நீதித்துறை நீதிபதி மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறை கண்காணிப்பாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார்.
மக்கள் நீதிமன்றத்தில் 19 வழக்குகள் விசாரிக்கப்பட் டன. இதையடுத்து பதிவேடு கள், சமையலறை போன்ற வற்றை நீதிபதிகள் பார்வையிட் டனர். பின்னர் சிறையில் இருந்த கைதிகளிடம் நீதிபதி கள் குறைகளை கேட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ‘இனிமேல் தவறுகள் செய்து சிறைக்கு வரக்கூடாது. சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த தவறுகள் நடந்திருக்கலாம். இந்த தவறினால் உங்கள் குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும். உங்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதை பயன்படுத்தி நல்லமுறையில் வாழ வேண்டும்’ என்றனர்.
இதில் போளூர் வக்கீல் சங்க தலைவர் சசிகுமார், செயலாளர் மதியழகன், முன்னாள் அரசு வக்கீல் செழியன், நவீன்குமார், போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, தன்னார்வலர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் அண்ணாமலை செய்திருந்தார்.
Related Tags :
Next Story