தஞ்சை ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகளை இயக்கி சோதனை அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது
தஞ்சை ரெயில் நிலையத்தில் பயணிகள் எளிதில் தண்டவாளங்களை கடந்து செல்லும் வகையில் 2 இடங்களில் ரூ.2½ கோடியில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகளை இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த படிக்கட்டுகள் அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயில் நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரெயில் நிலையத்தில் மொத்தம் 5 நடைமேடைகள் உள்ளன. தஞ்சையில் இருந்து திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் 23–க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னை, கோவை, திருச்செந்தூர், எர்ணாகுளம், கோயம்புத்தூர், திருப்பதி, ராமேஸ்வரம், புதுச்சேரி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர 15–க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் தஞ்சை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதில் இருந்து ரெயில்களில் கூட்டம் மேலும் அதிகரித்து வருகிறது. மேலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில்(தஞ்சை, நாகை, திருவாரூர்) சுற்றுலா தலங்கள், புண்ணிய தலங்கள் போன்றவை உள்ளன. இங்கு வருவோர்களும் ரெயில் பயணத்தையே அதிக அளவில் விரும்புகிறார்கள்.
இதையடுத்து ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு அதிக வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை ரெயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் இருந்து நடைமேடைக்கு செல்லும் பகுதி மேடான பகுதி. இந்த பகுதிக்கு செல்ல சாய்வான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர முதியவர்கள், நடக்க முடியாதவர்கள் செல்வதற்கு மூன்று சக்கர தள்ளுவண்டியும் ரெயில் நிலையத்தில் உள்ளன. தஞ்சை ரெயில் நிலையம் ‘ஏ’ கிரேடு ரெயில் நிலையம் ஆகும். திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் வரும் ரெயில் நிலையமாக தஞ்சை விளங்குகிறது.
தஞ்சை ரெயில் நிலையத்தில் 1–வது நடைமேடையில் இருந்து 3, 4 மற்றும் 5–வது நடைமேடைகளுக்கு செல்வதற்காக தண்டவாளத்திற்கு மேல் நடைபாலம் உள்ளது. இது தவிர ரெயில் நிலையத்தின் நுழைவு வாயிலின் அருகே இருந்து 1 மற்றும் 2, 3 ஆகிய நடைமேடைகளுக்கு செல்வதற்கு சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் பயணிகளுக்கு வசதியாக உள்ளது.
இந்த நிலையில் பயணிகளுக்கு மேலும் வசதியை ஏற்படுத்தும் வகையில் 1–வது மற்றும் 2, 3–வது நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இதற்காக நடைமேடை பகுதிகளில் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு ரூ.2 கோடியே 41 லட்சம் செலவில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரெயில் நிலையங்களில் திருச்சி ரெயில் நிலையத்தில் மட்டும் ஒரு இடத்தில் நகரும் படிக்கட்டுகள் உள்ளன. ஆனால் தஞ்சை ரெயில் நிலையத்தில் 2 இடங்களில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 படிக்கட்டுகளிலும் பயணிகள் ஏறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இறங்குவதற்கு ஏற்கனவே உள்ள படிக்கட்டு வழியாகத்தான் இறங்க வேண்டும். இதற்காக நகரும் படிக்கட்டுகள் நடைபாலமும், ஏற்கனவே இருந்த நடைபாலமும் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகரும் படிக்கட்டுகள் சோதனை முறையில் இயக்கி பார்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவ்வப்போது சோதனை முறையில் இயக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்சாதன பணிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளில் ஏறி நடைமேம்பாலத்தில் பயணிகள் செல்வதற்கான பாதுகாப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நகரும் படிக்கட்டுகள் தொடர்பான பணிகள் முடிவடைந்து சோதனை முறையில் இயக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிறிய, சிறிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவடையும்.
அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் இருந்து இந்த நகரும் படிக்கட்டுகள் பயன்பாட்டிற்கு வரும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Tags :
Next Story