வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 20 Dec 2018 4:15 AM IST (Updated: 19 Dec 2018 11:26 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனிஸ்வர் நகரை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி நிஷா (34). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நிஷா கடன் பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் வருண் வேணுகோபால் (31). இவர் மத்திகிரி அருகே உள்ள பேளகொண்டப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story