அம்மா திட்ட முகாம் நாளை நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு


அம்மா திட்ட முகாம் நாளை நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2018 3:00 AM IST (Updated: 20 Dec 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அம்மா திட்ட முகாம்

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்தந்த தாசில்தார் தலைமையில் நடத்தப்படுகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

கிராமங்கள்

முகாம் தூத்துக்குடி தாலுகா மறவன்மடத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா தோழப்பன் பண்ணையிலும், திருச்செந்தூர் தாலுகா காயல்பட்டினம் வடபாகத்திலும், சாத்தான்குளம் தாலுகா திருப்பணி புத்தன்தருவையிலும், கோவில்பட்டி தாலுகா இடைச்செவல்-2 கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகா அரியநாயகிபுரத்திலும், எட்டயபுரம் தாலுகா படர்ந்தபுளியிலும், ஓட்டப்பிடாரம் தாலுகா புதூர்பாண்டியாபுரத்திலும், கயத்தாறு தாலுகா கே.சிதம்பராபுரத்திலும், ஏரல் தாலுகா தன்னூத்து கிராமத்திலும் நடக்கிறது.

இந்த முகாமில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால்நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன.

எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story