நாமக்கல் அருகே புதிய வாக்காளர்களின் வீடுகளில் கலெக்டர் ஆய்வு


நாமக்கல் அருகே புதிய வாக்காளர்களின் வீடுகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Dec 2018 4:15 AM IST (Updated: 20 Dec 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்ற கலெக்டர் அவர்களின் பெயர் மற்றும் முகவரி பட்டியலில் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

இதில் மாவட்டம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தனர். இவர்களில் தகுதியானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சரியாக உள்ளதா ? என கலெக்டர் ஆசியா மரியம் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். நாமக்கல் அருகே உள்ள மாரப்பநாய்க்கன்பட்டி பகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்ற கலெக்டர், குறிப்பிடப்பட்டு உள்ள முகவரியில் அவர் வசிக்கிறாரா?, பெயர் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். இதேபோல் திருச்செங்கோடு அருகே உள்ள உஞ்சனை கிராமத்திலும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் தாசில்தார்கள் உடன் இருந்தனர்.

Next Story