இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என ஓட்டப்பிடாரத்தில் நடந்த கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கட்சியினரை கேட்டுக் கொண்டார்.
ஓட்டப்பிடாரம்,
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என ஓட்டப்பிடாரத்தில் நடந்த கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கட்சியினரை கேட்டுக் கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் குழு ஆலோசனை கூட்டம் மாலையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துகடவு எம்.எல்.ஏ. சண்முகம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது கூறியதாவது:-
நல்லாட்சி தொடர...
ஜெயலலிதாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி புரிந்து வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வின் நல்லாட்சியை கெடுக்க சிலர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் பேச்சை சிலர் கேட்டதால், இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவின் வழியில் நல்லாட்சி தொடர அ.தி.மு.க. வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் கிராமம் கிராமமாக சென்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவர்த்தி செய்ய பாடுபட வேண்டும்.
புளியம்பட்டியில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரசு மனநல ஆஸ்பத்திரி திறப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் போடு சாமி, முன்னாள் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேவேந்திரகுல சமுதாயம் உள்பட 7 உட்பிரிவுகளையும் இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் சவலாபேரி, பூவாணி, சிங்கத்தாகுறிச்சி உள்ளிட்ட கிராம மக்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story