ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.2½ லட்சம் தாமிர கம்பி திருடிய 5 பேர் கைது
கார் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் தாமிர கம்பிகள் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் பகுதியில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் தாமிர கம்பிகள் திருட்டு போவதாக நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் மண்ணூர் பகுதியை சேர்ந்த புண்ணியக்கோட்டி (வயது 37), குமார் (40), ராஜா (53), திருவள்ளூரை அடுத்த பரமேஸ்வரமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் (33), சிகாமணி (53) ஆகியோர் நிறுவனத்தில் ரூ.2½ லட்சம் தாமிர கம்பிகளை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தாமிர கம்பிகளை பறிமுதல் செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story