ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; காவலாளி பலி


ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; காவலாளி பலி
x
தினத்தந்தி 20 Dec 2018 4:00 AM IST (Updated: 20 Dec 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காவலாளி பலியானார்.

ஸ்ரீபெரும்புதூர்,

திருவள்ளூர் மாவட்டம் முதுகூர் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 65). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மண்ணூர் கூட்டுசாலை அருகே செல்லும்போது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் லோகநாதன் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

சாவு

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story