சென்னை-சேலம் 8 வழிசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளிக்க வந்தவர்களை தடுத்ததால் தர்ணா
சென்னை-சேலம் 8 வழிசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளிக்க வந்தவர்களை தடுத்ததால் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்,
சென்னை-சேலம் 8 வழி சாலைக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 59 கி.மீட்டர் தூரம் 1,000 ஏக்கருக்கு மேல் நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டு நிலங்களை கையகப்படுத்தி வந்த நிலையில் கோர்ட்டு 8 வழிசாலை திட்டத்திற்கு தடை விதித்துள்ளது.
இந்தநிலையில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை நேரில் சென்று மனு கொடுக்க 8 வழிசாலை எதிர்ப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தர்ணா
மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க விடாமல் தடுத்ததால் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் துறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story