பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை உயர்வு
பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் தாலுகாவில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் சந்தையில் வெல்லம் ஏலம் நடைபெறுகிறது.
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரம் உருண்டை வெல்லம் சிப்பமும், 3 ஆயிரம் அச்சு வெல்லம் சிப்பமும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,150 வரையிலும், அச்சு வெல்லம் ரூ.1,150 வரையிலும் ஏலம் போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 9 ஆயிரம் உருண்டை வெல்லம சிப்பமும், 6 ஆயிரம் அச்சு வெல்லம் சிப்பமும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் உருண்டை வெல்லம் ரூ.1,200 வரையிலும், அச்சு வெல்லம் ரூ.1,200 வரையிலும் ஏலம் போனது.
வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story