வண்டலூர் பூங்காவில் காட்டெருமை கன்று ஈன்றது


வண்டலூர் பூங்காவில் காட்டெருமை கன்று ஈன்றது
x
தினத்தந்தி 20 Dec 2018 4:30 AM IST (Updated: 20 Dec 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டெருமை கன்று ஈன்றது.

வண்டலூர், 

வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள லலிதா என்ற காட்டெருமை அங்குள்ள விஜயன் என்ற காட்டுமாடு உடன் இணை சேர்ந்தது. இதனையடுத்து கடந்த 16.12.2018 அன்று லலிதா அழகான பெண் கன்றை ஈன்றது. தற்போது பூங்காவில் மொத்தம் 23 காட்டெருமைகள் உள்ளன. இதில் 10 ஆண் மற்றும் 13 பெண் ஆகும். புதிதாக கன்று ஈன்ற தாய் மற்றும் குட்டி இரண்டும் நல்ல ஆரோக்கியமான முறையில் உள்ளது.

வண்டலூர் பூங்காவில் உள்ள காட்டெருமைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுவதால் தொடர்ந்து இவை இனப்பெருக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story