திருப்பாவை உற்சவ வீதி உலா


திருப்பாவை உற்சவ வீதி உலா
x
தினத்தந்தி 20 Dec 2018 3:30 AM IST (Updated: 20 Dec 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் ஐவேலிஅகரத்தில் திருப்பாவை உற்சவ வீதியுலா நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ஐவேலிஅகரத்தில் உள்ள ஏ.பி.எஸ். பள்ளிக்குழுமம் சார்பில் மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவை உற்சவ வீதியுலா நடைபெற்றது. இதற்கு ஏ.பி.எஸ். பள்ளிக்குழும செயலாளர் ரமேஷ் சுப்பிரமணியம், பொருளாளர் பிரேமா சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

அப்போது 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் இருந்து கிருஷ்ணர், ஆண்டாள் போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து வழிநெடுகிலும் திருப்பாவை பாடல்களை பாடி வந்தனர். அவர்கள் திருவள்ளூரில் உள்ள வீரராகவ சாமி கோவிலுக்கு வந்து பாசுரங்களை பாடினர்.

இதில் பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்கள் பாபு, தொல்காப்பியன், பள்ளி முதல்வர்கள் சாருலட்சுமி, ரத்னாபாய், பள்ளி பாடத்திட்ட இயக்குனர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story