கொளத்தூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


கொளத்தூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 20 Dec 2018 1:50 AM IST (Updated: 20 Dec 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூரில் இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் வடக்கு ஜெகநாத புரம் 8-வது தெருவைச் சேர்ந்தவர் அருண்பிரபு (வயது 29). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

அருண்பிரபு ஒரு வருடத்துக்கு முன்பு வடக்கு ஜெக நாதபுரம் 2-வது பிரதான சாலையை சேர்ந்த விமலா(21) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 3 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் மாலை விமலா, தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார், விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விமலாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். விமலாவுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story