‘கஜா’ புயலால் அழிந்த ஓவியங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் சகோதரர்கள்
‘கஜா‘ புயலால் அழிந்து போன ஓவியங்களுக்கு சகோதரர்கள் இருவர் புத்துயிர் கொடுத்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை,
கடந்த மாதம்(நவம்பர்) தமிழகத்தை கஜா புயல் தாக்கியது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் சின்னாபின்னமானது. இதில் மாவட்டம் முழுவதும் மின்கம்பங்கள், தென்னை, வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
இதேபோல, தோல்பாவை கூத்து கலைஞர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி னர். இவர்கள் கூத்து நடத்துவதற்கு வைத்திருந்த தோல்பாவைகள் அனைத்தும் சேதமடைந்து விட்டன. இதனால், அவர்கள் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல, திருமயம் அருகே உள்ள நெய்வாசல்பட்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது தோல் பாவைகளும் புயலால் சேதமடைந்தன. இதனால் அவர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்.
தோல் பாவை கூத்து கலைஞர்களின் நிலையை அறிந்த பாரம்பரிய மரபு சார்ந்த ஓவியங்கள் மற்றும் தஞ்சாவூர் ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள் போன்றவற்றை வரைவதில் கை தேர்ந்த ஓவிய சகோதரர்களான அய்யப்பா, ராஜப்பா ஆகியோர் தோல் பாவை கூத்தை மீண்டும் நடத்த முடியாமல் தவித்து வந்த கிருஷ்ணனுக்கு உதவ முன் வந்தனர். அதன்படி, அனைத்து ஓவியங்களையும் இலவசமாக வரைந்து கொடுக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து ஓவிய சகோதரர்கள் கூறுகையில், தோல்பாவை கூத்து கலைஞர் கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் தோல் பாவை கூத்தை கடந்த 45 ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும், ராமாயணம், மகாபாரதம் போன்ற நிகழ்ச்சிகளில் கதாபாத்திரங்களை ஓவியங்களாக ஆட்டு தோலில் உருவாக்கி பாவை கூத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த ஓவியங்கள் புயலால் அழிந்து போய் விட்டதாக அறிந்தோம். ஒரு கலை அழிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களுக்கு ஓவியங்களை எந்த கட்டணமும் வாங்காமல் வரைந்து கொடுத்து வருகிறோம் என்றனர்.

Related Tags :
Next Story