காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்


காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2018 4:00 AM IST (Updated: 20 Dec 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நயினார்கோவில்,

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்டு கட்சியின் நயினார்கோவில் ஒன்றியம் சார்பில் பாண்டியூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் காத்தமுத்து தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் களஞ்சியம், மாவட்ட தலைவர் அங்குச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜீவா, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிபாரதி, சாகுல்ஹமீது உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பாண்டியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். நயினார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இப்பகுதி மக்களின் நலன் கருதி ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து நயினார்கோவில் வழியாக பரமக்குடிக்கு இரவு நேரத்தில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். பாண்டியூரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் ராமமூர்த்தி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


Next Story