பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாழை, பாக்கு மர இலைகளை பயன்படுத்துங்கள் வியாபாரிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்
வாழை, பாக்கு மர இலைகளை பயன்படுத்த வியாபாரிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான விழிப்புணர்வு கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணை கமிஷனர் மதுசூதன் ரெட்டி உள்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இதில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், குடியிருப்பு நல சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன் பேசியதாவது:-
உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தாள்கள், தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத்தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பைகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை வணிகர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
அதற்கு பதிலாக வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, மூங்கில்-மரப்பொருட்கள், காகித குழல்கள், துணி-காகித-சணல் பைகள், காகித-துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள், வெட்டுப்பொருட்கள் மற்றும் மண் குவளைகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் மாசில்லா நிலையை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story