மனைவியுடன் பேசியதால் ஆத்திரம் பேரூராட்சி ஊழியருக்கு வெட்டு; 3 பேர் கைது
பேரூராட்சி ஊழியரை வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம்,
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் ஏ.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் பாசம் (வயது 27). இவர், மாடம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் குப்பை அள்ளும் வாகனத்தின் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவருடைய மனைவியுடன் பாசம் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுரேசுக்கும், பாசத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
சரமாரியாக வெட்டினர்
நேற்று காலை பாசம், வழக்கம்போல் குப்பை அள்ளும் வாகனத்தை ஓட்டிக்கொண்டு மப்பேடு பகுதியில் சென்று குப்பை அள்ளிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ், அவருடைய தந்தை தாஸ்(57), தம்பி மகேஷ்(28) ஆகிய 3 பேரும் சேர்ந்து பாசத்தை குப்பை அள்ளும் இரும்பு தகரத்தால் தாக்கியதுடன், கத்தியாலும் சரமாரியாக வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா வழக்குப்பதிவு செய்து சுரேஷ், அவருடைய தந்தை தாஸ், தம்பி மகேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story