கர்நாடக மேல்-சபை துணைத்தலைவராக தர்மேகவுடா போட்டியின்றி தேர்வு ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்
கர்நாடக மேல்-சபை துணைத்தலைவராக தர்மேகவுடா போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெங்களூரு,
கர்நாடக மேல்-சபை துணைத்தலைவராக தர்மேகவுடா போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேல்-சபை துணைத்தலைவர்
கர்நாடக மேல்-சபை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகள் காலியாக இருந்தன. மேல்-சபை தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப்சந்திரஷெட்டி கடந்த வாரம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மேல்-சபை துணைத்தலைவர் பதவிக்கு 19-ந் தேதி(அதாவது நேற்று) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பதவி, காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
போட்டியின்றி தேர்வு
அதன்படி ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் உறுப்பினர் தர்மேகவுடா நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் மேல்-சபை துணைத்தலைவராக தர்மேகவுடா நேற்று போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு மேல்-சபை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி, மந்திரி ஜெயமாலா மற்றும் எதிர்க்கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். மேலவை தலைவர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்தும்போது, நடுநிைலயுடன் செயல்படுமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story