விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா


விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 20 Dec 2018 5:00 AM IST (Updated: 20 Dec 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கல்வி அதிகாரி மணிவண்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். அரசு தலைமை கொறடாவும், அரியலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தா.பழூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், காரைக்குறிச்சி ஆகிய 4 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 756 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி பேசினார். இந்த விழாவில் அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து, ஒன்றிய செயலாளர் வரதராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன், மாவட்ட மகளிரணி தலைவர் ஜீவாஅரங்கநாதன், பள்ளிதுணை ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமையாசிரியர் காரைக்குறிச்சி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோடாலிகருப்பூர் தலைமையாசிரியர் தமிழ்மாறன் நன்றி கூறினார்.



Next Story