காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்து நிர்வாக குறைபாடு நோயாளிகளின் எமன் ஆனது சிவசேனா தாக்கு


காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்து நிர்வாக குறைபாடு நோயாளிகளின் எமன் ஆனது சிவசேனா தாக்கு
x
தினத்தந்தி 20 Dec 2018 4:45 AM IST (Updated: 20 Dec 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

காம்கார் ஆஸ்பத்திரியின் நிர்வாக குறைபாடு நோயாளிகளின் உயிருக்கு எமனாக மாறியதாக அந்த ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிவசேனா கருத்து தெரிவித்து உள்ளது.

மும்பை,

காம்கார் ஆஸ்பத்திரியின் நிர்வாக குறைபாடு நோயாளிகளின் உயிருக்கு எமனாக மாறியதாக அந்த ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிவசேனா கருத்து தெரிவித்து உள்ளது.

நிர்வாக குறைபாடு

மும்பையில் கடந்த 10 வருடத்தில் 84 ஆயிரம் தீ விபத்துகள் நிகழ்ந்து உள்ளதாக சிவசேனா கட்சி தெரிவித்து உள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

குடியிருப்பு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதில் வசிப்பவர்கள், கட்டுமான அதிபர்கள், ஹவுசிங் சொசைட்டியை சேர்ந்தவர்கள் பொறுப்பாளிகளாக கருதப்படுவார்கள்.

காம்கார் மருத்துவமனை தீ விபத்துக்கு காரணமாக யாரை குறை கூறுவது?. நிர்வாக குறைபாடுகள் காரணமாக இங்கு உயிர்களை காப்பாற்றும் ஆஸ்பத்திரியே நோயாளிகளுக்கு எமனாக மாறியுள்ளது.

600 பேர் பலி

மும்பையில் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்துகள் வாடிக்கையாகி விட்டன. கடந்த 10 ஆண்டுகளில் 84 ஆயிரம் தீ விபத்துகள் ஏற்பட்டு உள்ளது. இந்த தீ விபத்துகளில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தீ விபத்து பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், ‘‘காம்கார் ஆஸ்பத்திரி தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று இன்றி செயல்பட்டு வந்துள்ளது. எனவே இதற்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசு இரண்டும் சமமாக பொறுப்பு ஏற்க வேண்டும்’’ என்றார்.

Next Story