அரசு பள்ளிகளில் தரமான மதிய உணவு வழங்க வேண்டும்; அமைச்சர் கமலக்கண்ணனிடம் தனவேலு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


அரசு பள்ளிகளில் தரமான மதிய உணவு வழங்க வேண்டும்; அமைச்சர் கமலக்கண்ணனிடம் தனவேலு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Dec 2018 5:33 AM IST (Updated: 20 Dec 2018 5:33 AM IST)
t-max-icont-min-icon

அரசுபள்ளிகளில் தரமான மதிய உணவு வழங்க வேண்டும் என அமைச்சர் கமலக்கண்ணனிடம் தனவேலு எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

பாகூர்,

புதுவை மாநிலம் காட்டுக்குப்பத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவ–மாணவிகளுக்கு மத்திய உணவு கூடத்தில் இருந்து உணவு தயாரித்து எடுத்து வந்து மதியம் வழங்குவது வழக்கம். அதேபோல் நேற்று மதியம் பள்ளிக்கு வேனில் உணவு எடுத்து வரப்பட்டது.

அப்போது பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலு காட்டுக்குப்பத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவர் மதிய உணவு வண்டியை நிறுத்தி உணவு தரமாக இருக்கிறதா? என பரிசோதித்து பார்த்தார். பள்ளி மாணவர்களிடம் உணவு எப்படி இருக்கிறது? எனவும் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த மாணவர்கள், சாப்பாடு தரமானதாக இல்லை, சாதம் சாப்பிட முடியாத அளவுக்கு மிகவும் பெரிதாக இருப்பதாகவும் கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தனவேலு எம்.எல்.ஏ. உடனடியாக அமைச்சர் கமலக்கண்ணனை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எளிதாக சாப்பிடும் வகையில் பொடி அரிசியை சமையலுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். மேலும் தரமான முறையில் உணவை தயாரித்து வழங்கும்படி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கமலக்கண்ணன் உறுதி அளித்தார்.


Next Story