நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்; நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் - அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம், மாநில அந்தஸ்து, கவர்னர் வெளியேற வலியுறுத்தி அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றம் முன்பு அனைத்து கட்சியினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.கள் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்தார். அதன்படி புதுச்சேரி நூறடி சாலையில் உள்ள சன்வே ஓட்டலில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர்.பாலன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, தனவேலு, விஜயவேணி, தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி. சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி விஸ்வநாதன், நாரா.கலைநாதன், அபிஷேகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெருமாள், முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவ.பொழிலன் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் மத்திய அரசு நியமித்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும், மக்களாட்சி அமைப்பிற்கும் பாதகமாக அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும்போது புதுவை அரசும், அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து மாநில உரிமையை காக்க வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கைகளை அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் உண்டு. கொள்ளைப்புற வழியாக நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அரசின் உரிமையை பறிக்கும் வகையில் செயல்பட்டால் அது ஜனநாயகத்திற்கு முரண்பாடானது என்று அனைத்து அரசியல் கட்சி தலைவரும் ஏகமனதாக தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சுப்ரீம் கோர்ட்டில் நானும், எம்.எல்.ஏ.க்களும், அரசியல் கட்சிகளும் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.
புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. நிதி, நிர்வாகம் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாநில அந்தஸ்து தான் ஒரே வழி என்று அனைத்து அரசியல் கட்சி தலைவரும் முன்மொழிந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கவர்னர் கிரண்பெடி புதுச்சேரி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்து வருகிறார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது, நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது, கவர்னரே புதுவையில் இருந்து வெளியேறு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story