மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு


மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Dec 2018 3:15 AM IST (Updated: 20 Dec 2018 7:19 PM IST)
t-max-icont-min-icon

மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்றார்.

ஆம்பூர்,

மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. திருப்பத்தூர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் எஸ்.பிரேம்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர்கள் யுவராஜ், ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பேசுகையில், ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கால்வாய் தூர்வாருதல், தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் வகையில் செயல்பட வேண்டும். நிதிஇல்லை என்று சொல்லக்கூடாது. ஊராட்சியில் நிலவும் பிரச்சினைகளை ஒன்றிய ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்க வேண்டும், ரே‌ஷன் கடை சரிவர திறப்பதில்லை என மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டத்தில் ஆவின் தலைவர் வேலழகன், ஒன்றிய செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்பரசன் மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story