செய்யாறு அருகே கல்லூரி மாணவருடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம் போலீசில் பெற்றோர் புகார்


செய்யாறு அருகே கல்லூரி மாணவருடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம் போலீசில் பெற்றோர் புகார்
x
தினத்தந்தி 21 Dec 2018 5:00 AM IST (Updated: 20 Dec 2018 8:18 PM IST)
t-max-icont-min-icon

2 குழந்தைகளின் தாய் கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்யாறு, 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா பொற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவருக்கும் செய்யாறு அருகே அருந்ததியர்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஹேமாவதி (வயது 27) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கணவன்–மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஹேமாவதி அருந்ததியர்பாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் செய்யாறில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், ஹேமாவதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர் ஹேமாவதியுடன் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் மாணவரின் பெற்றோர் புகார் அளித்தனர். இதில் எங்களின் மகனை ஹேமாவதி என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக கூறி உள்ளனர்.

அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரையும், ஹேமாவதியையும் தேடி வருகின்றனர்.


Next Story