ஸ்ரீவைகுண்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலவரையற்ற வேலைநிறுத்தம்
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதலை ஒரே அரசாணையின் மூலம் அனைவருக்கும் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கணினிவழி சான்றுகள் வழங்குவதற்கு நவீன கணினிகள், இணையதள இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 10-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஆன்-லைன் மூலம் பல்வேறு சான்றிதழ்களை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரை இல்லாமல், வருவாய் ஆய்வாளர், மண்டல துணை தாசில்தார் பரிந்துரையில், தாசில்தார் சான்றிதழ்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டம்
இதனைக் கண்டித்தும், ஸ்ரீவைகுண்டம் தாசில்தாரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும், கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நேற்று ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாவட்ட தலைவர் கணேச பெருமாள் தலைமை தாங்கினார்.
இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story