அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்


அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Dec 2018 4:00 AM IST (Updated: 21 Dec 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் நடைபெற்ற அரசு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரசு பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி தொடக்க விழா சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதனை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்து பேசியதாவது:- உடல் ஆரோக்கியமாக இருக்க விளையாட்டு முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொருவரும் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது விளையாட்டு மற்றும் யோகா போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

அவ்வாறு கடைபிடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கினால் தான் ஒவ்வொருவரின் எண்ணமும், சிந்தனையும் ஒருநிலைப்பட்டு நல்ல செயல்பாடுகள் வெளித்தோன்றும். எனவே, ஒவ்வொரு நாளும் நடைபயிற்சி மேற்கொள்வது போல் தங்களுக்கு ஏதுவான விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாட வேண்டும்.

அதன் மூலம் என்றும் ஒரே நிலையிலான உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட முடியும். எனவே தான் அரசு பணியாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பணியாளர்களும் இதுபோல் மாவட்ட அளவில் நடக்கும் விளையாட்டு போட்டியில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கலெக்டர் பேட்மின்டன் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு, சிவகங்கை தாசில்தார் ராஜா, அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story