பாளையங்கோட்டையில், 29-ந்தேதி ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தகவல்
பாளையங்கோட்டையில் வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை)ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் கூறிஉள்ளார்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை)ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் கூறிஉள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஊர்க்காவல் படை
நெல்லை மாவட்ட ஊர்க்காவல் படை ப்பிரிவில் சேர்ந்து சேவை செய்வதற்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நாங்குநேரி, ஏர்வாடி, திருக்குறுங்குடி, விஜயநாராயணம், மூன்றடைப்பு, களக் காடு, மூலக்கரைப்பட்டி, சேரன்மாதேவி, முக்கூடல், முன்னீர்பள்ளம், பத்தமடை, சுத்தமல்லி, வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஊர்க்காவல் படைப்பிரிவில் சேர்ந்து சேவை செய்ய விரும்புவோர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு உட்பட்டவராகவும், நல்ல உடல் தகுதியுடனும் இருக்க வேண்டு்ம். குறைந்தபட்ச கல்வி தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு துறையில் பணிபுரிபவராகவோ அல்லது சுய தொழில் செய்பவராகவோ இருக்கலாம்.
29-ந்தேதி தேர்வு
இதற்கான தேர்வு நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் அசல் கல்வி சான்று மற்றும் நகல் சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் 2 தபால் அட்டையுடன் காலை 8 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்.
தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு போலீஸ் துறையால் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு வேலை செய்யும் நாட்களில் மட்டும் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.560 மட்டும் சன்மானமாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
Related Tags :
Next Story