வீட்டுமனைகளை அளவீடு செய்து தரக்கோரி பொதுமக்கள் மறியல்


வீட்டுமனைகளை அளவீடு செய்து தரக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 20 Dec 2018 10:45 PM GMT (Updated: 20 Dec 2018 8:22 PM GMT)

அரியலூர் மாவட்டம் ஆதிச்சனூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட குடும்பத்தை சேர்ந்த 64 பேருக்கு கடந்த 2007-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் ஆதிச்சனூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட குடும்பத்தை சேர்ந்த 64 பேருக்கு கடந்த 2007-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகே மற்றொரு சமூகத்தினர் குடியிருந்து வரும் நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அண்மையில் மனைகளை அளவீடு செய்து ஆதிதிராவிடர்களுக்கு கொடுக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த 14-ந் தேதி அந்த இடம் அளவீடு செய்யப்பட்டது. அப்போது 24 பேருக்கு மட்டுமே இடம் அளந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களுக்கு அளவீடு செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று விளாங்குடி- தா.பழூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த உடையார்பாளையம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் விளாங்குடி- தா.பழூர் சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story