ஆலங்குளம் அருகே மாட்டின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம் கால்நடை மருத்துவர்கள் சாதனை
ஆலங்குளம் அருகே மாட்டின் வயிற்றில் இருந்து 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி கால்நடை மருத்துவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே மாட்டின் வயிற்றில் இருந்து 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி கால்நடை மருத்துவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
பசுமாடு
ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு காவலாகுறிச்சையை சேர்ந்தவர் கருப்பசாமி. விவசாயி. இவரது பசு மாடு உணவு உண்ணாமல் இருந்தது. மாட்டை கருப்பசாமி பரிசோதனைக்காக வெண்ணிலிங்கபுரம் அரசு கால்நடை மருத்துவர் ராஜேசிடம் கொண்டு சென்றார். அங்கு பரிசோதனையில் மாட்டின் இரைப்பையில் ஜீரணம் ஆக முடியாத பொருள் இருப்பது தெரியவந்தது.
பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்
பின்னர் அந்த பொருளை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு, கால்நடை மருத்துவர்கள் ராஜேஷ், ராமசெல்வம், ரமேஷ் தலைமையிலான குழு கருப்பசாமி வீட்டில் வைத்து மாட்டிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதில் மாட்டின் வயிற்றில் இருந்து 4 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கயிறுகள், ரப்பர் டயர் டியூப்களை அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் மாடு இயல்பு நிலைக்கு திரும்பியது. மாட்டின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி சாதனை செய்த கால்நடை மருத்துவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story