மீனம்பாக்கத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த மகனை, போலீசில் ஒப்படைத்த தந்தை


மீனம்பாக்கத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த மகனை, போலீசில் ஒப்படைத்த தந்தை
x
தினத்தந்தி 21 Dec 2018 2:17 AM IST (Updated: 21 Dec 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

மீனம்பாக்கத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த மகனை, தந்தை போலீசில் ஒப்படைத்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வனிதா(வயது 26). இவர் மீனம்பாக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் அவரிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்று விட்டார். இது குறித்த புகாரின்பேரில் மீனம்பாக்கம் போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர். இதற்கிடையில் மீனம்பாக்கம் குளத்துமேடு பகுதியை சேர்ந்த ஒருவர், மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். தனது மகன் செல்போன் பறிப்பில் ஈடுபடுவதாகவும், தற்போது வீட்டில் இருப்பதாகவும் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து மீனம்பாக்கம் போலீசார், அவரது வீட்டுக்கு சென்று அவருடைய மகனான 17 வயது சிறுவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அதில் அவர், மீனம்பாக்கத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செல்போன்களை பறித்து செல்வதும், வனிதாவிடமும் இவர்தான் செல்போன் பறித்ததும் தெரிந்தது. அவரிடமிருந்து 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Next Story