பட்டாபிராம் பகுதியில் பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ்-மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்
பட்டாபிராம் பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக அந்த வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை பட்டாபிராமில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை சென்டிரல்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:12609), வரும் 23-ந் தேதி 1.35 மணிக்கு புறப்படும் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் பெங்களூரு- சென்னை சென்டிரல் லால்பாக் எக்ஸ்பிரஸ்(12608), வரும் 23-ந் தேதி புறப்படும் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை சென்டிரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ் (16054), வரும் 23-ந் தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்படும் ரெயில் சென்டிரல்-அரக்கோணம் இடையேயும், திருப்பதி- சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ்(16054), வரும் 23-ந் தேதி காலை 10 மணிக்கு புறப்படும் ரெயில் அரக்கோணம்-சென்டிரல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கோவை-சென்னை எக்ஸ்பிரஸ்(12680), வரும் 23-ந் தேதி காலை 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் அரக்கோணம்-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரல்- கோவை எக்ஸ்பிரஸ்(12679), வரும் 23-ந் தேதி மதியம் 3.30 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.
* பெங்களூரு-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ்(12610) வரும் 23-ந் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் ரெயில் திருவள்ளூர்-சென்னை சென்டிரல் இடையேயும், மங்களூரு-சென்னை சென்டிரல் மேற்கு கடற்கரை எக்ஸ்பிரஸ்(22638), நாளை(சனிக் கிழமை) அரக்கோணம்-சென்டிரல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை சென்டிரல்-பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ்(12607), வரும் 23-ந் தேதி மாலை 4.15 மணிக்கு திருவள்ளூரில் இருந்து புறப்படும்.
மின்சார ரெயில்கள்
வரும் 23-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் மதியம் 3 மணி வரை, பட்டபிராம் ராணுவ சைடிங்கில் இருந்து புறப்படும் மின்சார ரெயில் மற்றும் வந்து சேரும் மின்சார ரெயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் நோக்கி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படும்.
மூர்மார்க்கெட்-ஆவடி இடையே ½ மணி நேரத்துக்கு ஒருமுறை பயணிகள் ரெயில் இயக்கப்படும்.
அரக்கோணத்தில் இருந்து மூர்மார்க்கெட், கடற்கரை, வேளச்சேரி நோக்கி புறப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் வரும் 23-ந் தேதி மாலை 4 மணி வரை திருநின்றவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கி புறப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் ஆவடி வரை இயக்கப்படும். மறுமுனையில் இந்த மின்சார ரெயில்கள் ஆவடியில் இருந்து பயணிகள் சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். அரக்கோணம்-திருத்தணி மதியம் 12.20, 12.45 மணிக்கு வரும் 23-ந் தேதி பயணிகள் மின்சார ரெயில் இயக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story