பாலியல் வழக்கில் பிடிவாரண்டு பிறப்பித்தும் வரவில்லை வருகிற 3-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக நித்யானந்தா சாமியாருக்கு உத்தரவு


பாலியல் வழக்கில் பிடிவாரண்டு பிறப்பித்தும் வரவில்லை வருகிற 3-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக நித்யானந்தா சாமியாருக்கு உத்தரவு
x
தினத்தந்தி 21 Dec 2018 3:45 AM IST (Updated: 21 Dec 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் வழக்கில் பிடிவாரண்டு பிறப்பித்தும் கோர்ட்டுக்கு வராத நித்யானந்தா சாமியார் வருகிற 3-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக ராம நகர் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, 

பாலியல் வழக்கில் பிடிவாரண்டு பிறப்பித்தும் கோர்ட்டுக்கு வராத நித்யானந்தா சாமியார் வருகிற 3-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக ராம நகர் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தா சாமியார்

ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். கடந்த 2010-ம் ஆண்டு பிடதி ஆசிரமத்தில் பெண் சீடரான ஆர்த்திராவை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் கார் டிரைவராக இருந்த லெனின் கருப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகள் விசாரணை ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகளில் ஏற்கனவே ராமநகர் கோர்ட்டில் நித்யானந்தா சாமியார் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து, நித்யானந்தா சாமியாருக்கு ராமநகர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து, அவரை கைது செய்ய பிடதி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

3-ந் தேதி ஆஜராக உத்தரவு

இந்த நிலையில், நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகள் தொடர்பாக ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நேற்று நீதிபதி கோபால கிருஷ்ணராய் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் பிடிவாரண்டு பிறப்பித்திருந்த நிலையில் நேற்றும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வக்கீல், நித்யானந்தா சாமியார் ஆன்மிக சுற்றுப்பயணத்தில் இருப்பதால், அவரால் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என்று கூறினார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோபால கிருஷ்ணராய், இந்த வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு(2019) ஜனவரி 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் நித்யானந்தா சாமியார் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Next Story