பிளாஸ்டிக் தடை அமல்: விரைவில் 35 லட்சம் துணிப்பைகள் சந்தைக்கு வரும் மந்திரி ராம்தாஸ் கதம் தகவல்


பிளாஸ்டிக் தடை அமல்: விரைவில் 35 லட்சம் துணிப்பைகள் சந்தைக்கு வரும் மந்திரி ராம்தாஸ் கதம் தகவல்
x
தினத்தந்தி 21 Dec 2018 4:30 AM IST (Updated: 21 Dec 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் தடை அமல் எதிரொலியாக விரைவில் 35 லட்சம் துணிப்பைகள் சந்தைக்கு வரும் என மந்திரி ராம்தாஸ் கதம் கூறினார்.

மும்பை, 

பிளாஸ்டிக் தடை அமல் எதிரொலியாக விரைவில் 35 லட்சம் துணிப்பைகள் சந்தைக்கு வரும் என மந்திரி ராம்தாஸ் கதம் கூறினார்.

கருத்தரங்கம்

மராட்டியத்தில் கடந்த ஆண்டு பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. தற்போது வியாபாரிகள், பொதுமக்கள் சகஜமாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மாநில மாசு கட்டுபாட்டு வாரியம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கை மந்திரி ராம்தாஸ் கதம் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

35 லட்சம் துணிப்பைகள்

2050-ம் ஆண்டு உலகம் முழுவதும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கணித்து உள்ளனர். நகர்ப்புறம் வளர்ச்சி அடைந்து, மக்கள் தொகை பெருகி, காடுகள், மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் அப்போது அதிகளவு சுகாதாரப்பிரச்சினைகள் ஏற்படும். விரைவில் மராட்டிய சந்தைக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக 35 லட்சம் துணிப்பைகள் வரும். இதற்காக பெண்கள் நிதி மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.5 கோடி வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் பேசிய சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலாளர் அனில் திக்கிகர், மாநிலத்தில் 17 நகரங்களில் காற்று மாசு அதிகரித்துவிட்டது. அந்த நகரங்களில் காற்று தரச்சோதனை நிலையங்கள் அமைக்கப்படும், என்றார்.

Next Story