சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 22 Dec 2018 3:00 AM IST (Updated: 22 Dec 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் பலாத்கார முயற்சி

விளாத்திகுளம் அருகே வேம்பாரைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவருடைய மகன் செல்வகுமார் (வயது 27). இவர் மீது கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சூரங்குடி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

செல்வகுமார் நேற்று முன்தினம் மாலையில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்

போக்சோ சட்டத்தில் கைது

அப்போது அந்த சிறுமி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, செல்வகுமாரை பிடித்து, விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்தார். அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story