கிராம நிர்வாக அலுவலர்கள் கைது


கிராம நிர்வாக அலுவலர்கள் கைது
x
தினத்தந்தி 22 Dec 2018 4:00 AM IST (Updated: 22 Dec 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம்,

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பேரணி, மறியல், ஆர்ப்பாட்டம் என போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜெகன்ராயன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் கருப்பணன், மாவட்ட துணை செயலாளர் அசோக், அமைப்பு செயலாளர் கருப்பணன், தென்மண்டல செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட முயன்ற 15 பெண்கள் உள்பட 132 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

Next Story