சாவிலும் இணைபிரியாத தம்பதி: கணவன் இறந்த சிறிது நேரத்தில் மனைவியும் சாவு


சாவிலும் இணைபிரியாத தம்பதி: கணவன் இறந்த சிறிது நேரத்தில் மனைவியும் சாவு
x
தினத்தந்தி 22 Dec 2018 3:30 AM IST (Updated: 22 Dec 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் அருகே, கணவன் இறந்த சிறிது நேரத்தில் மனைவியும் இறந்தார்.

விக்கிரமசிங்கபுரம், 

விக்கிரமசிங்கபுரம் அருகே, கணவன் இறந்த சிறிது நேரத்தில் மனைவியும் இறந்தார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரம் நாராயண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 86). இவர் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி அழகம்மாள் (76). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இருவரும் வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை வீட்டில் ராஜாராம் நடந்து சென்ற போது கீழே விழுந்தார். விழுந்த சில மணி நேரத்தில் அவர் இறந்து போனார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி அழகம்மாள் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

மனைவியும் சாவு 

தகவல் அறிந்ததும் அவருடைய உறவினர்கள் திரண்டு வந்தனர். பின்னர் மதியம் ஒரு மணி அளவில் ராஜாராம் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதற்கிடையே ராஜாராம் இறந்த சோகத்தில் இருந்த அழகம்மாளும் சிறிது நேரத்தில் திடீரென இறந்தார். பின்னர் இருவரின் இறுதிச்சடங்குகளும் ஒன்றாகவே நடந்து முடிந்தன.

இச்சம்பவம் அவர்களது உறவினர்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தினாலும், வாழ்வில் இணைந்த இவர்கள் சாவிலும் இணைபிரியாதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

Next Story