கவர்னர் மாளிகையில் பூனைகள் தொல்லை அதிகரிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி பெங்களூரு மாநகராட்சிக்கு கடிதம்


கவர்னர் மாளிகையில் பூனைகள் தொல்லை அதிகரிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி பெங்களூரு மாநகராட்சிக்கு கடிதம்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-22T03:11:17+05:30)

கவர்னர் மாளிகையில் பூனைகள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அதை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூரு மாநகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கவர்னர் மாளிகையில் பூனைகள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அதை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூரு மாநகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பூனைகள் தொல்லை

கர்நாடக கவர்னர் மாளிகை, விதானசவுதா கட்டிடத்தை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எலித் தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் எலிகளை பிடிக்க அங்கு பூனைகள் விடப்பட்டன.

தற்போது கவர்னர் மாளிகையில் பூனைகளின் எண்ணிக்கை உயர்ந்ததுடன், அதன் தொல்லையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கவர்னர் மாளிகையில் இருந்து பெங்களூரு மாநகராட்சிக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில், கவர்னர் மாளிகையில் பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும், அவற்றை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டது.

இதுகுறித்து கவர்னர் மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கவர்னர் மாளிகையில் 25-ல் இருந்து 30 பூனைகள் வரை உள்ளன. இந்த பூனைகள் கவர்னர் உள்பட மிக முக்கிய பிரமுகர்கள் பூங்கா பகுதியில் நடமாடும்போது, குறுக்கே வந்து இடையூறு செய்கின்றன. அதனால் அந்த பூனைகளை பிடித்து செல்லும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.

மறுவாழ்வு மையத்தில் விட...

இந்த கடிதத்தை அடுத்து பெங்களூரு மாநகராட்சி கால்நடைத்துறை பிரிவு இணை இயக்குனர் டாக்டர் ஜி.ஆனந்த் கூறுகையில், “பூனைகள் தொல்லை அதிகமாக இருப்பதாக கவர்னர் மாளிகையில் இருந்து மாநகராட்சிக்கு கடிதம் வந்தது. பூைனகளை ராஜ்பவனில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டது. அதன் அடிப்படையில் நாங்கள் கவர்னர் மாளிகைக்கு வந்து, ஆய்வு செய்ேதாம். அந்த பூனைகளை பிடித்து ஹெப்பாலில் உள்ள கால்நடைகள் மறுவாழ்வு மையத்தில் விட முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Next Story