வங்கி அதிகாரி போல் பேசி போலீஸ் டி.ஜி.பி.யின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் ‘அபேஸ்’ செய்தவர் கைது
வங்கி அதிகாரி போல் பேசி போலீஸ் டி.ஜி.பி.யின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் ‘அபேஸ்’ செய்ததாக கொல்கத்தாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
வங்கி அதிகாரி போல் பேசி போலீஸ் டி.ஜி.பி.யின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் ‘அபேஸ்’ செய்ததாக கொல்கத்தாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.2 லட்சம் ‘அபேஸ்’
கர்நாடகத்தில் மூத்த ஐ.பி.எஸ்.அதிகாரியாக இருப்பவர் ஏ.எம்.பிரசாத். இவர் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி.யாக செயல்பட்டு வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதி அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், வங்கி அதிகாரி எனக்கூறினார்.
மேலும், அவருடைய ஏ.டி.எம். கார்டுகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறியுள்ளார். இதை ஏ.எம்.பிரசாத் நம்பினார். இதன் காரணமாக ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை செல்போனில் அந்தநபரிடம் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவருைடய வங்கி கணக்குகளில் இருந்து ரூ.2 லட்சம் பணம் ‘அபேஸ்’ செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் மோசடியில் சிக்கியதை அவர் உணர்ந்தார்.
கொல்கத்தாவில் கைது
இதுகுறித்து, அவர் பெங்களூரு சி.ஐ.டி. சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக மர்மநபர் பேசிய செல்போன் எண்ணை கொண்டு விசாரணையை தொடங்கினர். அப்போது, அந்த செல்போன் எண் கொல்கத்தாவில் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொல்கத்தா சென்றனர். பின்னர், அவர்கள் ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.எம்.பிரசாத்திடம் வங்கி அதிகாரி போல் நடித்து ரூ.2 லட்சம் ‘அபேஸ்’ செய்ததாக கொல்கத்தாவை சேர்ந்த கிஷோர் குமார் என்பவரை கைது செய்தனர். இவர் கம்ப்யூட்டர் பழுது நீக்கும் பணி மற்றும் எலெக்ட்ரீசியனாக வேலை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story