கல்பாக்கம் அருகே சாராயம் கடத்தல்; பெண் கைது


கல்பாக்கம் அருகே சாராயம் கடத்தல்; பெண் கைது
x
தினத்தந்தி 22 Dec 2018 3:18 AM IST (Updated: 22 Dec 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே சாராயம் கடத்தியதாக பெண் கைது செய்யப்பட்டார்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். 3 பிளாஸ்டிக் கேன்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. ஆட்டோவை நிறுத்திய டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

தொடர்ந்து அருகில் உள்ள முள்புதர்களில் தேடிய போது மேலும் 6 பிளாஸ்டிக் கேன்களில் சாராயம் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 9 கேன்களில் 215 லிட்டர் சாராயத்தை கைப்பற்றிய போலீசார் அதே பகுதியை சேர்ந்த கலா (வயது 55) என்பவரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Next Story