வெளிமாவட்ட மின் ஊழியர்கள் தங்கியிருந்த திருமண மண்டபம் முன்பு கிராம மக்கள் தர்ணா
முத்துப்பேட்டை அருகே தெற்குக்காடு பகுதியில் சீரமைப்பு பணியில் ஈடுபடாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வெளிமாவட்ட மின் ஊழியர்கள் தங்கியிருந்த திருமண மண்டபம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளகம் தெற்குக்காடு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் செல்லும் மின்கம்பிகள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவை பழமையானது என்பதால் இப்பகுதியில் பல ஆண்டுகளாக குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இதனால் புதிய மின்கம்பிகள், மின்கம்பங்கள், புதிய டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் மின்சார வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் சீரமைப்பு மற்றும் மின்கம்பம், டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை தொடங்கினர். கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி வீதிய கஜா புயலால் தெற்குக்காடு கிராமத்தில் உள்ள அனைத்து மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தற்போது ஒருமாதம் கடந்தும் இப்பகுதியில் இன்னும் மின் சீரமைப்பு பணிகள் தொடங்கவில்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. இப்பகுதி மக்கள் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தில்லைவிளாகம் ஊராட்சி பகுதிக்கு வந்த வெளி மாவட்ட மின் பணியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பகுதி, ஆளுங்கட்சி பிரமுகர்கள் பகுதிக்கு மட்டும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் தெற்குக்காடு பகுதியை மட்டும் புறக்கணித்து விட்டனர்.
தெற்குகாடு பகுதிக்கு சீரமைப்பு பணிகள் கிடையாது. பிறகு உள்ளூர் பணியாளர்கள் வந்து சரி செய்வார்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தெற்குகாடு கிராம மக்கள் முத்துப்பேட்டை மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். ஆனாலும் சீரமைப்பு பணிக்கு பணியாளர்களை அனுப்பவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் அப்பகுதியை சேர்ந்த குமரவேல், சிங்காரவேல், வீராச்சாமி, வீரைய்யன், பொதிப்பன் ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வெளி மாவட்ட மின் பணியாளர்கள் தங்கியிருக்கும் முத்துப்பேட்டையில் உள்ள திருமண மண்டப வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபு சம்பவ இடத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தெற்குகாடு பகுதிக்கு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு சீரமைப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று ஊறுதியளித்தார். இதை தொடர்நது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story