கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம அலுவலர்கள் 130 பேர் கைது


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம அலுவலர்கள் 130 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2018 4:14 AM IST (Updated: 22 Dec 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர், 

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 10-ந் தேதி முதல் தொடர்வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் இவர்கள் தங்களது 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட இணை செயலாளர் திருமால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் பாலாஜி, மாவட்ட துணை செயலாளர் நல்லி கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் கார்த்திகேயன், வட்ட தலைவர் சீனிவாசன், வட்ட செயலாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

130 பேர் கைது

இதில் திரளான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதலை ஒரே அரசாணை மூலம் அனைவருக்கும் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வரும் கணினி வழி சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு செலவின தொகை மற்றும் வசதிகள் செய்து தரவேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 130 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தார்கள்.

Next Story