கள்ளக்குறிச்சியில் ரூ.40 லட்சத்தில் நுண்ணுரம் தயாரிப்பு மையம் கட்டும் பணி கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு


கள்ளக்குறிச்சியில் ரூ.40 லட்சத்தில் நுண்ணுரம் தயாரிப்பு மையம் கட்டும் பணி கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு
x
தினத்தந்தி 22 Dec 2018 10:00 PM GMT (Updated: 22 Dec 2018 6:33 PM GMT)

கள்ளக்குறிச்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நுண்ணுரம் தயாரிக்கும் மைய கட்டிட பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகள் என பிரிக்கப்படும். மக்காத குப்பைகள், அங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன.

மக்கும் குப்பைகளை பயன்படுத்தி நுண்ணுரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. அதற்காக தயாரிப்பு மையம் கட்ட தமிழக அரசு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி தற்போது நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் நுண்ணுரம் தயாரிக்கும் மையம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் துருகம் மெயின் ரோட்டில் 2 இடங்களில் நுண்ணுரம் தயாரிக்கும் மையம் கட்டப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நுண்ணுரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க அங்கிருந்த பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அருண், பணி மேற்பார்வையாளர் கோமதிநாயகம், துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், நகராட்சி கட்டமைப்பு ஆய்வாளர் தாமரைச்செல்வன், பணி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story