தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-
அவ்வையார் விருது
உலக மகளிர் தினவிழாவின் போது, 2018-19-ம் ஆண்டுக்கான பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த, தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு அவ்வையார் விருது, ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட, 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவர்கள் இந்த விருது பெற தகுதியானவர்கள்.
கடைசி நாள்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடையவர்கள், தாங்கள் மேற்கொண்ட சேவை குறித்த விவரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதற்கான கடைசி நாள் வருகிற 31-ந் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story