ஆலங்குளத்தில் பரிதாபம்: மின்வாரிய அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை


ஆலங்குளத்தில் பரிதாபம்: மின்வாரிய அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Dec 2018 3:00 AM IST (Updated: 23 Dec 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் மின்வாரிய அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆலங்குளம், 

ஆலங்குளத்தில் மின்வாரிய அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மின்வாரிய அதிகாரி

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் புரட்சி நகரை சேர்ந்தவர் காந்தி என்பவருடைய மகன் பாலமுருகன் (வயது 45). இவர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு அஜய் காந்தி (17) என்ற மகனும், மதனா (13) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பாலமுருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதேபோல் நேற்று முன்தினம் மாலையிலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலமுருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் பாலமுருகன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story