பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி ஊழியர் பலி


பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி ஊழியர் பலி
x
தினத்தந்தி 23 Dec 2018 3:30 AM IST (Updated: 23 Dec 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூங்காநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46). காஞ்சீபுரம் மாவட்டம் இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ராஜேந்திரன் வேலையை முடித்து விட்டு தன்னுடைய வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அவர் திருவள்ளூரை அடுத்த இலுப்பூர் சந்திப்பு சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவரது மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது.

சாவு

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story