பாளையங்கோட்டையில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு
போலீஸ் துறையில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கு தற்போது போலீசாராக பணிபுரிந்து வருவோரும், இளைஞர்களும் விண்ணப்பித்து இருந்தனர்.
நெல்லை,
போலீஸ் துறையில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கு தற்போது போலீசாராக பணிபுரிந்து வருவோரும், இளைஞர்களும் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்து இருந்த போலீசாருக்கான எழுத்து தேர்வு நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் 274 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
இந்த தேர்வை சிறப்பு பார்வையாளர் ரூபேஸ்குமார் மீனா, தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோர் கண்காணித்தனர். இதையொட்டி ஆயுதப்படை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது.
Related Tags :
Next Story