உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு


உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 22 Dec 2018 8:13 PM GMT (Updated: 2018-12-23T01:43:36+05:30)

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்திரமேருர், 

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சாலவாக்கம் கூட்ரோடு சீனிவாசன் நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 17-ந்தேதி மோட்டார்சைக்கிளில் சாலவாக்கம் கூட்ரோட்டில் இருந்து உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் மங்களம் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story